பட்டுக்கோட்டையில் கார் திருட்டு

Posted February 01, 2016 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்கண்ணா (வயது 48). இவர் தனது காரில் பட்டுக்கோட்டை கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள பணிமனை அருகே காரை நிறுத்தி சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது கார் திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து அவர் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிச்சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் கார் திருட்டு”