பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு முகாம்
Posted February 18, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி பிப்ரவரி-18;
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு முகாம் பள்ளி தலைமையாசியர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. உதவித்தலைமை ஆசிரியர் மு.மணியரசன் வரவேற்றார். உதவி தலைமையாசியர் ப.சிவஞானம் அறிக்கை வாசித்தார். உதவித்தலைமை ஆசிரியர் சி.ராஜேந்திரன் தொடக்கவுரையாற்றினார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் க.இராசசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத்தலைவர் ஏ.தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியப் பெருந்தலைவர் சாந்தி அசோக்குமார் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்கறிஞர் குழ.செ.அருள்நம்பி, பேரூராட்சி கவுன்சிலர் மணி ரவி, மூத்த பத்திரிக்கையாளர் ஏ.கே.வெள்ளிமலை, ஆசிரியர்கள் நடராஜன், ஜேசுராஜ், அடைக்கலமணி, கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.இராமநாதன் நன்றி கூறினார்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு முகாமிற்கு பள்ளி தலைமையாசியர் சி.கஜானாதேவி தலைமை வகித்தார். ஆசிரியர் ஏ.சற்குணம் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ம.காளீஸ்வரி அறிக்கை வாசித்தார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத்தலைவர் ஏ.பால் பக்கர் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மா.கோவிந்தராஜன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிப் பேசினார். நிறைவாக உதவித் தலைமையாசியர் ஏ.முருகேசன் நன்றி கூறினார்.
0 comment(s) to... “பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு முகாம் ”