அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலத்தில் விட முடிவு
Posted February 05, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய திடலில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட கடைகள் ஏற்கனவே இருந்தன. அந்த கடைகள் இரண்டு முறை தீ பிடித்து எரிந்து நாசமாயின. அதன் பிறகு பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.அந்த கோரிக்கையை ஏற்று மத்திய முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம,; பொது நிதியிலிருந்து, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைத்து முறையான டெண்டர் வைத்து கடைகள் கட்டி முடிக்கப்பட்டன. பேரூந்து நிலையம் வடபுரத்தில் 10 கடைகளும்; தென்புரத்தில் 14 கடைகளும், கட்டி முடிக்கப்பட்டன. மொத்தம் 24 கடைகள் வேலைகள் முடிந்;த நிலையில் உள்ளன. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலம்மாக எந்தவித கடைகளும் திறக்காமலும், எந்தவித முயற்சியும் இல்லை. இதனால் வியாபார ரீதியில் பாதிப்பு அடைந்துள்ளன. இதனையடுத்து கடைகளை வாடகைக்கு விட பேரூராட்சி நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பொது ஏலம் எதிர்வரும் 16-02-2016 செவ்வாய் கிழமை அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comment(s) to... “அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலத்தில் விட முடிவு ”