தஞ்சை மாவட்டத்தில் 34 ஆயிரம் பேர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினர்

Posted February 29, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 34 ஆயிரம் பேர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது. இதில் 34 ஆயிரம் பேர் கலந்து கொண்டு இந்த தேர்வினை எழுதினர்.

தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வு மையத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வுகளை 116 மையங்களில் 34 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ் வசதி
மேலும் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு செய்து தேர்வுகள் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களும் தேர்வு மையங்களில் பணிகளை மேற்கொண்டனர். தேர்வு எழுதியவர்களுக்காக சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் 34 ஆயிரம் பேர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினர்”