“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?
Posted February 15, 2016 by Adiraivanavil in Labels: அன்புடன் அந்தரங்கம்
“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?
“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?
அன்புள்ள அம்மாவிற்கு,
நான், 33 வயது ஆண்; எங்கள் வீட்டில் அனைவருமே அரசு ஊழியர்கள். நானும், வங்கியில் பணிபுரிகிறேன். நான் ஒரு
எங்களது காதல் விவகாரம், உடன் பணிபுரிவோர் அனைவருக்கும் தெரி
யும். ‘நாம் திருமணம் செய்துகொள்வோம்…’ என, நான் கூறிய போது, அவளது அண்ணி கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறி, சிறிது நாட்கள் கழித்து திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றாள். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், என் கால் உடைந்து, 3 மாதம், ‘பெட் ரெஸ்ட்’டில்
இருந்தேன்.
அச்சமயம், என் காதலியின் பெரியம்மா பெண், அவர்கள் ஊரில் ஒருபையனை காதலித்த விஷயம் வெளியே தெரிய வர, எங்களது விவகாரத்தையும், தன்பெற்றோரிடம் தெரி யப்படுத்தியுள்ளாள். என் காதலி. இதனால், அன்றிலிருந்து இவளை வே லைக்கு வர விட வில்லை அவளது பெற்றோர்.

நான் மருத்துவமனையில் இருந்ததால், என்னால் அவ ளை தொடர்புகொள்ள முடியவில்லை. அவளும், எனக்கு போன்செய்யவில்லை. ஒன்றரை மாதத்திற்குபின், ஒரு நாள் எனக்குபோன்செய்து பேசினாள். பின் மீண்டும் அவ ள் பணிக்கு வந்துகொண்டிருந்த நிலையில், நான், முன்பு தேர்வுஎழுதிய வங்கியில் இருந்து பணியில்வந்து சேரும் படி கடிதம் வந்தது. அதனால், நான் புதிய வங்கியில் வேலைக்குசேர்ந்
தேன். இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்த நிலையில் முதல், இரண்டு ஆண்டுகளை காட்டிலும், எங்களுக்குள் அன்பு, காதல் இன்னும் அதிகமானது.
நான் மருத்துவமனையில் இருந்ததால், என்னால் அவ ளை தொடர்புகொள்ள முடியவில்லை. அவளும், எனக்கு போன்செய்யவில்லை. ஒன்றரை மாதத்திற்குபின், ஒரு நாள் எனக்குபோன்செய்து பேசினாள். பின் மீண்டும் அவ ள் பணிக்கு வந்துகொண்டிருந்த நிலையில், நான், முன்பு தேர்வுஎழுதிய வங்கியில் இருந்து பணியில்வந்து சேரும் படி கடிதம் வந்தது. அதனால், நான் புதிய வங்கியில் வேலைக்குசேர்ந்
அவளுக்கும் தனியார்துறைவங்கிலேயே, ‘பர்ம னட்’ ஆவதற்கான தேர்வு வந்தது. நான்தான் அவளை தேர்விற்கும், பின், இன்டர்வியூவிற்கும் கூட்டிச் சென்றேன். இன்டர்வியூவில் செலக்ட்
ஆன தும், வேறு ஒரு ஊரில், ‘போஸ்டிங்’ போட்டனர். சனிக்கிழ மைதோறும் அவள் பணிபுரியும் ஊருக்குசென்று, பார்த்து வந்தேன். 2 மாதம் கழித்து, அவள் வீட்டிற்கு அருகில் உள்ள கிளைக்கு, மாறுதல் கேட் டுப் பெற்றாள்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் என்தாயார் இற ந்தார். அனா தையாக உணர்ந்தேன். அப்போது என் காதலி, எங்கள் வீ
ட்டி ற்கு வந்து, ‘ உனக்கு நான் இருக்கேன் தாயாக… நீ எதுக் குடா அழற… உன்கூட கடைசி வரைக்கும் இருப்பேன் …’ என்று ஆறுத ல் கூறினாள்.
அன்று என் உறவினர்கள் அனைவருக்கும் அவளை அறி முகப்படுத்தினேன். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் சம் மதம். ஆனால், அம்மா இறந்து ஒரு ஆண்டு முடியாததா ல், எங்கள் திருமணத்தை தள்ளி வைத்தோம்.
அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும், ‘இந்த திருமணம் வேண்டாம்…’ என அவளைக் கூறச் சொன்னார்கள். ஆனால், அவள் மனசு
மாறவில்லை. வேறு வழியில்லாமல் அவளது பெற் றோர், ‘எங்களுக்கு ஒருவாரகாலம் அவகாசம் கொடு ங்கள்…’ என்று கூறி, எங்களை அனுப்பினர்.
அன்று, அவள் வீட்டிலிருந்து கிளம்பும்போது, கடைசி யாக அவளுக்கு போன் செய்து, ‘நான், 54,000 ரூபாய் சம்பளம் வாங்குறேன்; சொந்தமாக வீடு, கார் இருக்கு; உன்னை மகாரா ணியாக பார்த்துக் கொள்வேன்…’ என்றேன். ‘சரின்னு சொல்லி, ‘கட்’
செய் து விட்டாள்.
அதற்குபின், அவள் போன் செய்யவே இல்லை. ஒருவாரம் சென்ற பின், பொறுமை இழந்து, அவளுக்கு, 6பக்கம், அவள் அம்மாவுக்கு, 5 பக் கம் என, கடிதம் எழுதி அனுப்பினேன். அன்று இரவு, எனக்கு போன் செய்த வள், ‘நீங்க வந்ததால் எங்க அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்
போய் விட்டது. நான்கு ஆண்டுகள் பழகிய உங்களை விட, 26ஆண்டுகள் வளர்த்த எங்க அம்மாதான் முக்கியம் .’ என்று ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிப்பவள் போல் கூறினாள்.அவள் அப்படி கூறியதும், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.இச்சம்பவத்திற்கு பின் அவளுடன் தொட ர்பு கொள்ள முடியவில்லை.
அம்மா… அவளை நான் ஒரு குழந்தையைப்போல தான் கவனித்தேன். அவ்வப்போது அவளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படு ம்; அப்போதெல்லாம், ‘பர்மிஷன்’ போட்டு, மருத்துவமனைக்கு அழைத்து
ச் செல்வேன். அத்துடன், அவளது பெற்றோருக்கு தேவையா ன மருந்துகளையும், அவள்வீட்டிற்கு தேவையான பழங்க ளையும் வாங்கி கொடுப்பேன்.
கடந்த, மூன்று ஆண்டுகளாக, இவளுக்கு பல முறை நாட்கள் தள்ளி போயிருக்கிறது. இருமுறை கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டு, ‘இப்போ து குழந்தை வேண்டாம்…’ என, அவள் சொன்னதன்பேரில், கருக்கலைப் புக்கு சம்மதித்தேன். அவளால், எப்படி என்னை மறந்து இன்னொரு ஆணை திருமணம் செய்ய
முடியும்?
அம்மா. ஒன்றை மட்டும் உறுதியாக கூறுவேன். என்னை த் தவிர அவள், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அப்படியே அவள், தன் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக சம்மதித்தாலும், அவளால் என்னை மறந்து, நிம்மதியாக வாழ முடியாது.
எங்கள் வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து விட்டனர். ஆனால், எனக்கு இவள்தான் வேண்டும். நான் இவளை திரும ணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா? உங்களது ஆலோச
னையைப் பொறுத்துதான் என் எதிர் கால வாழ்க்கை அமையும்.
— இப்படிக்கு,
அன்புள்ள மகன்.
அன்புள்ள மகன்.
அன்புள்ள மகனுக்கு –
காதலி, அவளது பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள் ளையையும், நீ, உன் வீட்டினர் பார்த்து வைக்கும் பெண் ணையும் திருமணம் செய்து, அவரவர் வழி, அவரவருக்கு என வாழ துணி . தற்கொலை எண்ணம் தவிர். காதலி இறந்து விட்டாள் அல்லது எங்கோ
தூர தேசம் சென்று விட்டாள் என நினைத்து, அவளின் நினைப்பை தலை முழுகு.
இவ்வுலகில் எந்த உறவும் நிலையானது அல்ல. எல்.கே.ஜி., முதல் கல்லூரி வரை ஒன்றாக படி த்த வகுப்பறை தோழியை, மறந்துவிடுகிறாள் சகதோழி. 26ஆண்டுகள் பெற்று வளர்த்து, ஆளா க்கி திருமணம்செய்து வைத்த பெற்றோரை மற ந்து விடுகிறான், மகன்.
உன்வீட்டினர் பார்த்து வைக்கும் பெண்ணை மணந்து, சந்தோஷமாக இரு; வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்
0 comment(s) to... ““அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?”