அதிரையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விவசாயி பலி
Posted February 02, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், பிப். 2–
அதிராம்பட்டினம் அருகே மலவேனிற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் (வயது 55), சாமிகண்ணு (60). விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் வைக்கோல் போர் வாங்குவதற்காக இன்று அதுகாலை மாட்டுவண்டியை எடுத்திகொண்டு சென்றுள்ளனர்.
சாமிகண்ணு வண்டியை ஓட்டிவந்துள்ளார். பழனிவேல் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதேவழியாக அவர்களது வண்டியின் பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிவந்த மாட்டிவண்டியின் மீது வேகமாக மோதியது.
இதில் மாட்டு வண்டியின் பின்னால் அமர்ந்து வந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்டியை ஓட்டி சென்ற சாமிகண்ணு படுகாயம் அடைந்தார்.
அதேபோல் வண்டியை இழுத்து சென்ற 2 மாடுகளில் ஒருமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடுக்கு கால்கள் முறிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த சாமிகண்னை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பழனிவேலின் உடலை அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து இறந்த மாடையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காயமடைந்த மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து அந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “அதிரையில் மாட்டு வண்டி மீது லாரி மோதி விவசாயி பலி”