ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டுவிழா

Posted February 26, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 18வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றன. இவ்விழாவிற்கு பட்டுக்கோட்டை
அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், டாக்டர் ஹாஜாமுகைதீன் ஆகியோர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் இராமகுணசேகரன், புதுக்கோட்டை உள்ளுர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பட்டுக்கோட்டை 27 வது வார்டு  உறுப்பினர் ரகுராமன், வழக்கறிஞர் சீனிவாசன், மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ,; ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பள்ளியின் ஆசிரியை அபிராமி ஆண்றிக்கை வாசித்தார். இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கராத்தே, மியூசிக், போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.


0 comment(s) to... “ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டுவிழா”