ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இலவச டிக்கட்.
Posted April 30, 2015 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது 10 ம் ஆண்டு விழாவையொட்டி சிலருக்கு இலவச விமான டிக்கட் வழங்குகிறது. வளைகுடா நாடுகளில் இந்திய தூதரகம் பரிந்துரைக்கும் நபர்களுக்கு இந்த இலவச டிக்கட் வழங்கப்படும். அத்துடன் 29 ஏப்ரல் 2015 முதல் 10 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்பவர்களிடையே கேள்வி பதில் மற்றும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் 50 பேர்களுக்கு அவர்கள் விரும்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை உள்ள இடத்திற்கு சென்று வருவதற்கான இரண்டு இலவச விமான டிக்கட்டுகள் வழங்கப் படும். மேலும் 30 மே 2015 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு 30 கிலோ எடை இலவச லக்கேஜ் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது
0 comment(s) to... “ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இலவச டிக்கட்.”