மின்கம்பி அறுந்து விழுந்து மாமனார், மருமகள், பேத்தி 3 பேர் படுகாயம்.
Posted April 08, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு(59). இவர் தனது வீட்டு பின்புறம் பாசன வாய்க்காலில் சீரமைப்பு பணியில் நேற்று காலை முதல் நூறு நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுடன் ஈடுப்பட்டு வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து அனைவரும் வீடு திரும்பிய நிலையில் தங்கராசு மட்டும் வீட்டுக்கு பின்புறம் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது
வாய்க்கால் ஓரம் மேலே சென்ற மின்சார கம்பி திடீரென்று தங்கராசு மீது அறுந்து விழுந்தது. இதில் தங்கராசு மீது மின்சாரம் தாக்கியது. அப்பொழுது சத்தத்தைக் கேட்ட மருமகள் நதியா(25) தனது மகள் சந்தியா(4)வை இடுப்பில் தூக்கி கொண்டு மாமனாரை காப்பாற்ற முயன்றார். அப்பொழுது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் மாமனார் தங்கராசு, மருமகள் நதியா, பேத்தி சந்தியா மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சேர்;த்தனர். அங்கு அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் செய்தி: நிருபர்
மு.முகைதீன்பிச்சை
0 comment(s) to... “மின்கம்பி அறுந்து விழுந்து மாமனார், மருமகள், பேத்தி 3 பேர் படுகாயம்.”