தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும்: கலெக்டர் சுப்பையன்
Posted April 14, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
அப்போது அவர் கூறியதாவது:–
மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களையும் துணை கலெக்டர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். சத்துணவு மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் கவனமாக சமையல் செய்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
சமையல் செய்யக்கூடிய இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சமைத்த உணவுகளை பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள அறிவுரைகளை ஏற்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனைத்து வகையான உணவுகளையும் வழங்க வேண்டும்.
சமைத்த உணவுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமையல்காரர் சாப்பிட்டு பார்த்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். நாளை (புதன் கிழமை) சத்துணவுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களும் செயல்படுவதற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே சத்துணவு மையங்களில் உணவு சாப்பிடும் மாணவ, மாணவிகள் வழக்கம்போல் தொடர்ந்து உணவு சாப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comment(s) to... “தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும்: கலெக்டர் சுப்பையன்”