முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர்கள்
அசோகன், அண்ணாதுரை இருவரது கூரை வீடுகளும் அடுத்தடுத்து உள்ளது. நேற்று முன்தினம் மின் கசிவின் காரணமாக இருவரது வீடுகளிலும் தீ பற்றி எரிந்தது. உடன் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அற்குள் 2 வீடுகளும் முழுவதும் எரிந்தது. இதில் வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், திருத்;துறைப்பூண்டி எம்.எல்.ஏ.உலகநாதன், ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.பி.நடராஜன், மாவட்ட கவுன்சிலர் முருகையன் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்தல் கூறினார்கள். பின்னர் வருவாய் துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
படங்கள் செய்திகள்
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை