வீட்டின் ஓட்டை பிரித்து நகை –பணம் கொள்ளை

Posted April 17, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை –பணம் கொள்ளைமுத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் குகன் ஆகியோர் வீட்டில்
வசித்து வருகிறார்கள். நேற்று இரவு இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு கொள்ளையன் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். உமா மகேஸ்வரி தனக்கு அருகில் பீரோ சாவியை வைத்து இருந்தார்.
அதனை எடுத்த கொள்ளையன் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5.700 ரொக்கப்பணம், ஒரு பவுன் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டான்.
இன்று அதிகாலை எழுந்த உமா மகேஸ்வரி பீரோ திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


0 comment(s) to... “வீட்டின் ஓட்டை பிரித்து நகை –பணம் கொள்ளை”