அதிரையில் பால்குடம் காவடியுடன் பங்குனி உத்திர விழா.[ படங்கள் இணைப்பு ]
Posted April 03, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலய பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது இதனையடுத்து பிள்ளைமார் தெரு விநாயகர் சன்னதியில் இருந்து பால்குடம், காவடிகளை எடுத்துக்கொண்டு முருகன் சன்னதியில் பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஊர்வலமாக சுமந்து வந்தனர். பக்தர்களின் பால்குடங்கள் சன்னதிக்கு வந்த பிறகு முருகனுக்கு அபிஷேகம் செய்யப் பட்டது. திருச்செந்தூர் முருகனுக்கு செய்வதைப் போல் பால், பழரசம், தேன், சந்தனம், தயிர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. விழாவின் சிறப்பம்சமே மயிலிறகு கொண்டு அலங்கரிக்கப்பட்ட் காவடிகளை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் வலம் வரும் காட்சியை காண பரவசமாக இருந்தது.




0 comment(s) to... “அதிரையில் பால்குடம் காவடியுடன் பங்குனி உத்திர விழா.[ படங்கள் இணைப்பு ] ”