அதிரையில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

Posted April 29, 2015 by Adiraivanavil in Labels:
அதிரை சாலை மறியல் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை இன்று காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்
நடைபெற்றது .இக்கூட்டத்தில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம்  அதிரைக்கு தேவையான மருத்துவ வசதி கூறித்து கும்பகோணம் வட்ட மருத்துவ இணை இயக்குனர் அவர்களிடம் எடுத்துரைத்தார் .இதனை கேட்டு கொண்ட இணை இயக்குனர் அதிரைக்கு தேவையான மருத்துவ வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார் .
கூட்டத்தின் முடிவில்  மருத்துவ இணை இயக்குனர் கூறியதாவது 
அதிரை உள்ள அரசு பொது மருத்துவ மனையில்  ஒரு மாத காலம் 24 மணி நேர மருத்துவ சேவை செய்ய தற்காலிகமாக மருத்துவர் சுழச்சி முறையில் நியமிக்கபடுவார்கள்  .அதனை தொடர்ந்து ஒரு மாத கால அவகாசத்தை தொடர்ந்து நிரந்தரமாக மருத்துவர்கள் பணி அமர்த்த படுவார்கள் .மேலும் அவசர சிகிச்சைக்கு முதலுதவி    உபகரணங்கள் அமைத்து தரப்படும் என கூறினார் .அதிரை தரப்பினர் வைத்த கோரிக்கைகளை அரசு  ஏற்றதால் நாளை நடக்க இருந்த சாலை  மறியல் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது . 
news by adiraixpress.


0 comment(s) to... “அதிரையில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்”