முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை கல்லடிக்கொல்லை பகுதியில் ஆண் மயில் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது. அதனை நாய்கள்
துரத்தி கடித்தது உடன் அப்பகுதி மக்கள் மயிலை நாயிடமிருந்து மீட்டு முத்துப்பேட்டை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காயப்பட்ட மயிலுக்கு சிகிச்சை அளிக்க மயிலை மீட்டு முத்துப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே டாக்டர் கங்காசூடன் மயிலுக்கு சிகிச்சை அளித்து வனத்துறையை சேர்ந்த மாரிமுத்துவிடம் ஒப்படைத்தார். பின்னர் சிகிச்சை பெற்ற மயில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் பறக்க விடப்பட்டது.
படம்செய்தி
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை