முத்துப்பேட்டை அடுத்த குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன்
செந்தில் (30). இவருக்கும், ஆரவள்ளி என்ற பெண்ணுக் கும் திருமணமாகி 5 மாதம் ஆகிறது. இந்நிலையில் ஆரவள்ளியின் சகோதரன் மகனுக்கு கடந்த 29ம்தேதி திருமணம் நடந்தது. இதற்கு கணவன், மனைவி இருவரும் சென்றிருந்தனர். திருமணம் முடிந்ததும் ஆரவள்ளி மட்டும் தனது சகோதரன் வீட்டிலேயே தங்கிவிட்டார். செந்தில் தனது வீடடிற்கு சென்று விட்டார். மறுநாள் ஆரவள்ளி வீடு திரும்பாததால் அவரிடம் செல்போ னில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி செந்தில் அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மன உளைச்சலடைந்தார். இந்நிலையில் நேற்று திருமண வீட்டில் கறி விருந்து இருந்ததால் செந்திலை மனைவி விருந்து சாப்பிட வரும்படி அழைத்தார். அதற்கு செந்தில் மறுப்பு தெரிவித்ததுடன் மனைவியை உடன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். ஆரவள்ளி மறுத்ததால் இருவருக்கும் போனிலேயே தகராறு ஏற்பட்டது. பின்னர் செந்தில் நேற்று காலை எடையூர் காவல் நிலையத்திற்கு வந்து வாசல் முன்பு கேனில் எடுத்து வந்த மண்ணெண்ணையை தனது உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் போராடி தீயை அணைத்து சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து எடையூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.