முத்துப்பேட்டை அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
Posted April 06, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு பாலம் அருகே ஆஸ்திரேலிய நாட்டின் அரியவகை ஆந்தை ஒன்றை காகங்கள் துரத்தி கொத்தியது. இதனால் ஆந்தை உயிருக்கு போராடிய நிலையில் ஆங்காங்கே பறந்து விழுந்தது. இதனைக் கண்ட மக்கள் காகங்களை விரட்டிவிட்டு ஆந்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் ஆந்தை பிடிபடவில்லை.
இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை வனத்துறை வனவர் அயூப்கான், வனக்காவலர் மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய ஆஸ்திரேலியா நாட்டு ஆந்தையை மீட்டு முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆந்தைக்கு மருத்துவ உதவி அளித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு”