அதிரை அருகே தொடரும் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை

Posted April 10, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ளபகுதிகளில் தொடர்ந்து ஆழ் குழாய் கிணறுகளில் ஒயர் களை மர்மநபர்கள் திருடி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ளவீரியங்கோட்டையை
சேர்ந்த பழனி வேல், திருமாவளவன், கோவிந்தசாமி, முத்துராமலிங்கம், வடிவேல் சேர்வை, சிதம்பரம், கைவனவயல் நீலகண்டன், மருங்கப்பள்ளம் பழனி வேல், சந்திரமோகன், துறையூர் பாலசுப்பிரமணியன், பரஞ் ஜோதி, அய்யாத்துரை உட் பட சுமார் 200க்கும் மேற் பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள மின்மோட் டார் கேபிள்களை (ஒயர்) மர்மநபர்கள் தொடர்ந்து திருடி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் சேர்மன் பழனிவேலு கூறும்போது, ஆழ்குழாய் கிணறுகள் அனைத்தும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத வயல்வெளி மற்றும் தென்னந்தோப்புகளில் அமைந்துள்ளது. ஒரு ஆழ்குழாய் கிணறு மின்மோட்டாருக்கு கேபிள் ரூ.20 ஆயிரம் வருகிறது. இந்த கேபிள்களை போஸ்ட் மரத்திலிருந்து ஆழ்குழாய் கிணறு வரை சாதாரணமாக வெட்டி எடுத்து சென்று விடுகின்றனர். கிணறுகள் தனியாக அமைந்துள்ளதால் ஒயர்களை திருட மர்மநபர்களுக்கு எளிமையாக அமைந்துவிடுகிறது. இதனால் ஒரு தனிப் படை அமைத்து கண்காணித்தால் தான் ஒயர் திரு டும் மர்மநபர்களை பிடிக்க முடியும். தொடர் ஒயர் திருட்டு சம்பவம் நடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார்.


0 comment(s) to... “அதிரை அருகே தொடரும் ஒயர் திருட்டு விவசாயிகள் கவலை”