தர்காவில் இந்து மாதத்தினரின் காதணி விழா

Posted April 04, 2015 by Adiraivanavil in Labels:
பொதுவாக இந்து மாதத்தினரின் காதணி விழாக்கள் கோவில் மற்றும் திருமண மண்டபங்களில் தான் நடைபெறும். இந்த நிலையில்
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவில் நேற்று முன்தினம் ஒரு இந்து மதத்தினரின் காதணி விழா மிக சிறப்பாக நடைபெற்ற சம்பவம் முத்துப்பேட்டை மக்களை ஆச்சிரியம் அடைய வைத்துள்ளது. அதன் விபரம் வருமாறு: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த மின்வார வாரிய அலுவலர் அன்பழகன், மைதிலி தம்பதியினர் புகழ் பெற்ற இந்த தர்கா மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். அதனால் தனது மகன்கள் சபரி ஆனந்த், பாலமுருகன் ஆகியோரின் காதணி விழாவை தர்காவை நடத்த பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கினார்கள். அதன் படி நேற்றுமுன் தினம் தர்கா முதன்மை அறங்காவளர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் காதணி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் வீட்டிலிருந்து தர்காவிற்கு நூற்றுக்கணக்கான சீர்வரிசைகள், தாம்புலங்கள் ஏந்தி வந்திருந்தனர். நிகழ்ச்சியில் தர்கா டிரஸ்டி தமீம் அனிசாரி சாஹிப் மற்றும் தர்கா நிர்வாகிகள் அன்பழகன், மைதிலியின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். முத்துப்பேட்டையில் பல ஆண்டுகாலமாக இரு பிரிவினர்களுக்கிடையே அடிக்;கடி ஏற்படும் மத மோதல்கள் நடந்து வரும் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு இந்து பிரமுகர்களின் காதணி விழா தர்காவில் நடந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “தர்காவில் இந்து மாதத்தினரின் காதணி விழா ”