அதிரைஅருகே சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல்

Posted September 26, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிரைஅருகே சேதுபாவாசத்திரத்தில் மீன் வளத்துறை அதிகாரிகளைக கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்வளத்தை அழிப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுதொடர்பாக கடலோர காவல்படை மீன்வளத்துறை
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புதன்கிழமை இரவு மீன்வளத்துறை ஆய்வாளர் கதிரேசன் மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்துப் படகில் 8-க்கு மேற்பட்ட விசைப்படகுகளை சோதனையிட்டு அவர்களிடமிருந்த பதிவேடுகளைக் கைப்பற்றினராம்.
அப்போது ஒரு விசைப்படகிலிருந்த சேதுபாவாசத்திரம் பகுதி மீனவர்கள் அருள்ராஜ்,காஜாமைதீன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது ஆய்வாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் பயந்த மீனவர்கள் இருவரும் கடலுக்குள் குதித்து கரைக்கு வந்தனராம். அதிகாரிகளின் இந்த அத்துமீறலைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், காவல்துணை கண்காணிப்பாளர் தீபாகர்ணிகர், வட்டாட்சியர் மாணிக்கவள்ளி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.


0 comment(s) to... “அதிரைஅருகே சேதுபாவாசத்திரத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல்”