நீரில் மேல் சைக்கிள் சவாரி செய்யும் இளைஞன்!
Posted September 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
தண்ணீரின் மேல் நடக்கமுடியுமா என கேட்கவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் வகையில் நீரின் மேல் நடந்து சாதனை படைத்து விட்டார்கள் மனிதர்கள். கற்பனையில் எண்ணிப்பார்க்காத
பல விடயங்களை இன்று மனிதன் சாதனையாக செய்து கொண்டிருக்கிறான். நீரில் படகு சவாரி செய்யலாம் ஆனால் சைக்கிள் சவாரி செய்ய முடியுமா? என்ன வியப்பாக இருக்கிறதல்லவா? முடியாது என நினைத்துவிடாதீர்கள். அதையும் சாதித்து காட்டியுள்ளான் ஒரு இளைஞன். இது பற்றி ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தி ஒன்றில் Matt menage எனும் 16 வயது இளைஞன் 75 அடி ஆழமான ஏரியின் மேல் சைக்கிள் ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சிறுவன் பாதிக்கப்பட்டவர்களுக்கா நிதி திரட்டுவதற்காகவே இவ்வாறு மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் இளைஞனின் சாதனை தொடர்பாக புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. குறித்த புகைப்படங்கள் ஒரு கிராபிக்வேலை என பலர் குறிப்பிட்ட போதிலும் இது உண்மையில் இடம்பெற்ற சாதனை எனவும் இச்சம்பவத்தை நேரில் பலர் கண்டுகளித்துள்ளதாகவும் இவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.0 comment(s) to... “நீரில் மேல் சைக்கிள் சவாரி செய்யும் இளைஞன்!”