முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் தி.மு.க., பா.ஜ.க.வினர் பங்கேற்பு

Posted September 26, 2014 by Adiraivanavil in Labels: ,
முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதை நடைமுறை படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க, பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதம்கடந்த தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி
மாற்றம் ஏற்பட்டதால் அறிவிக்கப்பட்ட தாலுகா நிர்வாகம் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று முத்துப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அறிவிக்கப்பட்டதை உடன் நடைமுறைப்படுத்த வழியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி உலகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான முருகையன், துணைச்செயலாளர் ராமநாதன், ஒன்றியகுழு துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் மார்க்ஸ், முன்னாள் நகர செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் வீரசேனன், முன்னாள் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கல்யாணசுந்தரம், விரப்பத்தரன், தென்னை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பா.ஜனதா மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா, தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் முகமது மாலிக், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணைச்செயலாளர் வெற்றி உட்பட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு பேசினர்.
இதில் தி.மு.க சார்பில் அரசு, கந்தவேல், மக்கள் ஆர்வலர் யானை.காலீது, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன் உள்பட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரசேகரஆசாத் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.நன்றி தினதந்தி


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் தி.மு.க., பா.ஜ.க.வினர் பங்கேற்பு”