அதிரை அருகே இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு
Posted September 22, 2014 by Adiraivanavil in Labels: சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழனிக்கோட்டையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் வெட்டுவாக்கோட்டையை சேர்ந்தவர் தினகரன், ராஜ்குமார் (19), திருச்செல்வம் (20). இவர்கள் 3 பேரும் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழனிக்கோட்டையில் உள்ள தனது தாத்தா சுப்பையாபிள்ளை வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள கல்லுப்பாலத்தில் அமர்ந்து கொண்டு தரைகுறைவான வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அதன் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கழனிக்கோட்டை பரிமளம் (35) என்பவர் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பரிமளத்தை திட்டி தாக்கினர். இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்த பரிமளத்தின் கணவர் குமரவேல் (40) மற்றும் வைத்தி, ராமமூர்த்தி, நாகூரான் ஆகியோர் தினகரன், ராஜ்குமார், திருச்செல்வம் ஆகியோர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டில் உள்ள ஓடுகளை உடைத்ததுடன் 3 பேரையும் தாக்கினர். இதில் கட்டையால் அடித்ததில் தலையில் காயமடைந்த தினகரன், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி பரிமளம் கொடுத்த புகாரின்பேரில் தினகரன், ராஜ்குமார், திருச்செல்வம் ஆகிய 3 பேர் மீதும் பேராவூரணி இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிந்து ராஜ்குமார், திருச்செல்வத்தை கைது செய்தனர்.
அதேபோல் தினகரன் கொடுத்த புகாரின்பேரில் குமாரவேல், வைத்தி, ராமமூர்த்தி, நாகூரான் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து குமரவேலை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.news dhinakaran அதிரை
0 comment(s) to... “ அதிரை அருகே இருதரப்பினர் மோதல் 7 பேர் மீது வழக்கு”