பட்டுக்கோட்டை: சர்வேயரை தாக்கி 12 பவுன் நகை கொள்ளை

Posted September 14, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை, செப். 14–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மயில்பாளையம் தெரு எல்.ஐ.சி. அருகே வசித்து வருபவர் கலியராஜ். சர்வேயர்.
நேற்று இரவு இவரது மகள் நீண்ட நேரம்
படித்து கொண்டிருந்தார். பின்னர் ஞாபக மறதியில் வீட்டை பூட்டாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்தான்.
அவன் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். முகத்தை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக துண்டால் மூடி இருந்தான். சமையல் அறை வழியாக படுக்கை அறைக்குள் நுழைந்த அவன் பீரோவில் வெளியே வைக்கப்பட்டு இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்தான்.
இந்த சத்தம் கேட்டு சர்வேயர் கலியராஜ் தாய் விழித்தார். அவர் கொள்ளையன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதனை கேட்டதும் ஹாலில் படுத்திருந்த கலியராஜ் ஓடி வந்தார்.
அவர் கொள்ளையனை பிடிக்க முயன்றார். அவரை தாக்கி தள்ளி விட்டு தப்பி சென்றான். அவனை துரத்தி பிடிக்க முயன்ற போது ஆயுதம் எதுவும் வைத்து இருக்கலாம். அவனை துரத்த வேண்டாம் என வீட்டில் இருந்த பெண்கள் பயத்துடன் கூறினார்கள்.
இதனால் கலியராஜ் கொள்ளையனை விரட்டுவதை விட்டு விட்டார். இது குறித்து பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா ஹரோக்கர், சப்–இன்ஸ்பெக்டர் தீபநாதன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையனின் ரேகையை பதிவு செய்தனர். கொள்ளையன் பீரோ லாக்கரை திறப்பதற்குள் வீட்டில் இருந்தவர்கள் விழித்து கொண்டதால் அதில் இருந்த நகைககள் தப்பியது. அவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. by malaimalar


0 comment(s) to... “பட்டுக்கோட்டை: சர்வேயரை தாக்கி 12 பவுன் நகை கொள்ளை”