அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினராக சேனா மூனா பதவியேற்றார்
Posted September 24, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. இதைதொடர்ந்து ஹாஜா முகைதீன் போட்டியின்றி
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்ப்பட்ட பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹாஜா முகைதீனுக்கு அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், ஹாஜா பகுருதீன், முஹம்மது ஹனிபா மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நன்றி அதிரைநியூஸ்0 comment(s) to... “அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினராக சேனா மூனா பதவியேற்றார் ”