பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் கருணாநிதி , சுப்பிரமணியசாமி கொடும்பாவி எரிப்பு மற்றும் கடையடைப்புடன் சாலைமறியல்

Posted September 27, 2014 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டையில் அதிமுகவின் இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் ஒரு அணியினர் மணிக்கூண்டு பகுதியில் கருணாநிதியின் கொடும்பாவியினை எரித்து கடைகளை அடைக்கக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மற்றும் ஒரு அணியினர் பேருந்துநிலையம் பகுதிகளில் கடைகளை அடைக்கச்சொல்லியும், மணிக்கூண்டு பகுதியில் இரண்டு கொடும்பாவி, பேருந்து நிலையம் பகுதியில் ஒன்று, என கருணாநிதி, சுப்பிரமணியசாமி உள்ளிட்டவர்களின் கொடும்பாவியினை எரித்தனர். பேருந்து நிலையம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர். நகரில் பேருந்துநிலையம். மணிக்கூண்டு, அறந்தாங்கிமுக்கம், பெரியக்கடைதெரு என பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு குழுவாக, கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கடைகளை அடைக்கச்சொல்லி வருகின்றனர். ஆர்பாட்டக்காரர்களிடம் கலவரம் செய்ய வேண்டாம் என பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீசனம் மற்றும் எஸ்.ஐ தீபநாதன் ஆகியோர் சமாதானம் பேசி ஆர்பாட்டக்காரர்களை கலைந்து போகச்சொன்னார்கள்.

நன்றி : 'நிருபர்' I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் கருணாநிதி , சுப்பிரமணியசாமி கொடும்பாவி எரிப்பு மற்றும் கடையடைப்புடன் சாலைமறியல்”