சவுதி அரேபியா விபத்தில் பேராவூரணி வாலிபர் பலி: உடலை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு

Posted September 24, 2014 by Adiraivanavil in Labels:
பேராவூரணி அருகே ஆ.வ.புரவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு சுரேஷ், வினோத் என்ற மகன்களும், ராதா என்ற மகளும் உள்ளனர். ராதா திருமணம் ஆகி கணவனுடன் வசித்து வருகிறார்.சுரேஷ் பக்ரைனில் வேலை பார்த்து வருகிறார். வினோத் சவூதி அரேபியாவில்
உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 21ந்தேதி வினோத் மற்றும் அவருடன் வேலை பார்த்தவர்கள் வேலை முடிந்து காரில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் வினோத் உள்பட 5 பேர் இறந்தனர். ஆனால் அவரது உடல் சவூதி அரேபியாவில் உள்ளது. இந்த நிலையில் வினோத் இறந்த தகவலை அறிந்த அவரது அண்ணன் சுரேஷ் பக்ரைனில் இருந்து ஊர் திரும்பினார்.
சுரேஷ் நேற்று தனது உறவினர்கள் மற்றும் பேராவூரணி நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுரேஷ் ஆகியோருடன் தஞ்சை வந்து கலெக்டர் சுப்பையனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் வினோத் கடந்த 21ந்தேதி நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். news malaimalar


0 comment(s) to... “சவுதி அரேபியா விபத்தில் பேராவூரணி வாலிபர் பலி: உடலை மீட்டு தர கோரி கலெக்டரிடம் மனு”