பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் நடத்திய அமைதி ஊர்வலம்
Posted September 30, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர் பாரதி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர தலைவர் குமார், நகர செயலாளர் பாண்டியராஜன், அனி சேரா ஓட்டுநர் மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் நகரசெயலாளர் விவேகானந்தன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றம் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மணிக்கூண்டினை அடைந்தது. அங்கு கூடிய அதிமுகவினர் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்பபு வழங்கியதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நிருபர் I.M. ராஜா ( பட்டுக்கோட்டை )
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் அதிமுகவினர் நடத்திய அமைதி ஊர்வலம்”