முத்துபேட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்

Posted September 20, 2014 by Adiraivanavil in Labels:

 முத்துபேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் 1.10.2007ல் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
செய்தார். இதுதொடர்பாக அவர் மீது முத்துபேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு திருவாரூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி ராஜேசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவர் மன வளர்ச்சி குன்றியவர் என்பதால் அவருக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு, மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார். malaimalar



0 comment(s) to... “ முத்துபேட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்”