அதிரை அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
Posted September 26, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலராக இருந்தவர் வீரமுத்து (57). இவரது மனைவி லட்சுமி (45). கீழப்பாளையம் தெருவில் வசித்து வந்தனர். ஆலங்குடியில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் லட்சுமி சென்றிருந்தார். வீரமுத்து வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீரமுத்து வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் தீயணை ப்பு நிலையத்துக்கு 8 மணிக்கு ரோல்கால் எடுக்க வர வேண்டியவர் வரவில்லை. காலை 7.30 மணி வரை வீரமுத்து வராததால் மற்ற அலுவலர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். போன் எடுக்கவில்லை. உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று அலுவலர்கள் பார்த்தனர். வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் மீண்டும் ஒருமுறை போனில் தொடர்பு கொண்டனர். அப்போதும் போனை எடுக்காததால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது சமையலறையில் வீரமுத்து தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
உடனடியாக அவரது மனைவி மற்றும் மகள், மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் வீரமுத்து மனைவி லட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வீரமுத்து ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள், வீரமுத்துவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நன்றிதினகரன்
0 comment(s) to... “அதிரை அருகே தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டு தற்கொலை”