ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!
Posted September 01, 2014 by Adiraivanavil in Labels: அதிசியம்
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த விவசாயி ஜி சின்பிங். இவரது வீட்டில் வளர்ந்த பன்றி கடந்த ஜூலையில் குட்டி போட்டது. அதில் ஒரு குட்டி பின்னங்கால்கள் இல்லாமல் இருப்பதை பார்த்து சின்பிங் அதிர்ச்சி அடைந்தார். அது நகரக்கூட முடியாமல் முனகிக்கொண்டே இருந்தது. அதன்
நிலையை பார்த்து பரிதாபப்பட்ட சின்பிங், சில நாட்களுக்கு பிறகு அதற்கு நடைபயிற்சி அளிக்க தொடங்கினார். பின்பகுதியை அவர் தூக்கி பிடித்துக் கொள்ள, முன்னங்கால்களை எட்டி வைத்து நடக்க ஆரம்பித்தது அந்த குட்டி. தற்போது, தானாகவே நடக்க ஆரம்பித்துவிட்டது. பேலன்ஸ் தவறாமல் அது நடந்து செல்வதை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
‘‘30 கிலோ அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனாலும், பேலன்ஸ் தவறாமல் நடக்கிறது. சில நேரம் திடீரென தடுமாறும். பின்பக்கத்தை தூக்கிவிட்டால் மீண்டும் நடக்கும். நாய் போன்ற விலங்குகள் முன்னங்காலை தூக்கி நடந்து சாகசம் செய்யும். முன்னங்காலை தூக்குவது எளிது. மொத்த எடையையும் தூக்கியபடி முன்னங்காலால் நடப்பது மிக சிரமம். நான் பயிற்சி கொடுத்திருந்தாலும் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு என் செல்லக் குட்டி நடக்கிறது என்றால், அதன் மன உறுதியே காரணம். அது இயற்கை தந்த வரம்’’ என்கிறார் சின்பிங்.

0 comment(s) to... “ஊனமாக பிறந்த பன்றி 2 காலால் நடக்கும் அதிசயம்!”