பேராவூரணியில் உலக கல்வி அறிவு நாளையொட்டி வியாழக்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சார்பில் நடைபெற்ற இப்பேரணி, வட்டாட்சியர்
அலுவலகத்திலிருந்து தொடங்கியது. பேரணிக்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை வகித்தார். ஆசிரியர் வீ. மனோகரன் பேரணியை தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் முதல்வர் முத்துவேல் முன்னிலை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கல்வி அறிவு பெற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி கோஷம் எழுப்பிச் சென்றனர். பேரணி நிறைவில் மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவழகன் நிறைவுரையாற்றினார். பேரணியில் என்சிசி, ரோட்ராக்ட், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துச்சாமி, சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.0 comment(s) to... “பேராவூரணியில் விழிப்புணர்வு பேரணி”