அதிரை அருகே தொக்களிக்காடு ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக வெற்றி !
Posted September 22, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிரை அருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 18-09-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிட்டனர்.இன்று காலை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.இதையடுத்து வெற்றி பெற்ற சிவக்குமாருக்கு பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P.N. ராமசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், அதிரை மற்றும் தொக்காளிகாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். செய்தி படம் அதிரைநியூஸ்
0 comment(s) to... “அதிரை அருகே தொக்களிக்காடு ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுக வெற்றி !”