பட்டுக்கோட்டையில் பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா பங்கேற்பு

Posted September 09, 2014 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டை,செப்.9–
பட்டுக்கோட்டை அழகிரி சிலை எதிரே பாரதீய ஜனதா கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் முரளிகணேஷ் கார் மற்றும் வீடு அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு மற்றும்
கல்வீச்சினால் தாக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய செயலாளர் எச். ராஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார். அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் செம்மை கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் சூரை சண்முகம், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் இளவரசன் உள்ளிட்ட மதுக்கூர், சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் வக்கீல் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் பட்டுக்கோட்டை நகர தலைவர் ராஜா நன்றி கூறினார்.
ஆர்பாட்டத்தில் எச். ராஜா பேசியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இந்து முன்னனி அமைப்பினர் தாக்கப்படுவது தொடர்கதை யாகிறது. கும்பகோணத்தில் மாவட்ட வணிகப்பிரிவு தலைவர் பஷீர் அகமதுவின் கார் தாக்கப்பட்டது.
திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர் செந்தில் குமார் மீது கத்திக்குத்து தாக்குதலும், பட்டுக்கோட்டையில் வக்கீல் முரளி கணேஷ் தாக்கப்பட்டது என பலர் தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மெத்தனமாக செயல்பட்டால் தங்களின் போராட்டம் பல்வேறு வகைகளில் வெளிப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். 


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் பா.ஜனதா கண்டன ஆர்ப்பாட்டம்: எச்.ராஜா பங்கேற்பு”