அதிராம்பட்டினம்வனவிலங்குக்கு குடிநீர் பிரச்னை தீர்க்க அலையாத்தி காடுகள் வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை வனத்துறைக்கு கோரிக்கை

Posted September 13, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம், : வனவிலங்குகளுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிராம்பட்டினம் அலையாத்தி காடு வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை கட்ட
வேண்டுமென வனத்துறைக்கு மறவக்காடு அலையாத்தி காடு பாதுகாப்பு சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.வனத்துறைக்கு மறவக்காடு அலையாத்தி காடுகள் சங்க தலைவர் சங்கர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, காட்டு முயல் மற்றும் பல விதமான பறவைகள், பழந்திண்ணி பெரிய வவ்வால் கள், பாம்புகள் வாழ்ந்து வருகிறது.  கோடை காலத்தில் காட்டில் உள்ள நீர்நிலைகள் வற்றி விடுவதால் வனவிலங்குகள் குடிதண்ணீர் இல்லாமல் காட்டை விட்டு நீர்நிலைகள் உள்ள பகுதிக்கு செல்கிறது. அப்படி வனவிலங்குகள் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி கொள்கிறது. ஆதலால் அதிராம்பட்டினம் அலையாத்தி காடுகள் வழியாக நசுவினி ஆறு, பாட்டுவநாச்சியாறு ஆகிய ஆறுகள் மழை காலங்களில் அதிக தண்ணீருடன் கடலில் கலக்கிறது. ஆதலால் இரண்டு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் கோடை காலத்தில் ஆற்றில் தண்ணீர் தேங்கி இருக்கும். 

அலை யாத்தி காட்டில் நீர்நிலைகள் வற்றினால் காட் டில் உள்ள வன வில ங்கு, பறவைகளுக்கு குடி நீராக பயன்படும் வனவிலங்குகள் கோடைகாலத் தில் காட்டை விட்டு வெளியே வராமல் இருக் கும். அத னால் அதிராம்பட் டினம் அலையாத்தி காடுகள் வழியாக செல்லும் நசுவினி ஆறு, பாட்டுவாநாச்சியா ஆறு ஆகிய காட் டாறு குறு க்கே தடுப்பணை அமைத்து வனவிலங்கு களை பாதுகாக்க வேண்டும்.மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பாபநாசம்,: பா பநாசம் திருப்பாலத்துறை பாலை மாரியம்மன் மற்றும் மதுரை வீரன், பேச்சியம் மன், நாக தேவதை ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 10ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை யாக சாலை பிரவேசம் முதல் கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கோ பூஜை 2ம் காலம், கடம் புறப்பாடு நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம்வனவிலங்குக்கு குடிநீர் பிரச்னை தீர்க்க அலையாத்தி காடுகள் வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை வனத்துறைக்கு கோரிக்கை”