முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி ஊழியர் பலி

Posted September 15, 2014 by Adiraivanavil in Labels:

முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி ஊழியர் பலியானார்.பேரூராட்சி ஊழியர் திருவாரூர் மாவட்டம் முத் துப்பேட்டையை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா என்கிற புதியசெல்வம் (வயது 35). இவர் முத்துப் பேட்டை
பேரூராட்சியில் தற்காலிக மின் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னக்கட்சி மரைக்காயர் தெருவில் மின்சார கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த அவர் மின்கம்பத்திலேயே தொங்கி னார். இதையடுத்து மின் வாரிய பணியாளர்கள் அவரை மீட்டு பட்டுக் கோட்டை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக் கப்பட்டது.


ஆஸ்பத்திரியில் சாவு



அதைதொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை யில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று ராஜா, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து முத்துப் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி இறந்த ராஜா என்கிற புதியசெல்வத் துக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். news thina thanthi


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி ஊழியர் பலி”