காதிர்முகைதீன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Posted September 12, 2016 by Adiraivanavil in Labels: காதிர்முகைதீன் கல்லூரி
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1983-1986 ஆம் ஆண்டு பேட்ஜில் கணிதம் பாடப்பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள்; குடும்பத்தினருடன் கலந்துகொண்ட சந்திப்பு நிகழ்ச்சி காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை உரையாற்றினர்;.கல்லூரி கணித துறை தலைவர் முனைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர், கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் பர்கத் ஆகியோர் கலந்துகொண்டனர்;. இதனையடுத்து சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி பேராசிரியர்கள் லெனின், ரவீந்திரன், ஓ. சாதிக், ஹாஜா அப்துல் காதர் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து முன்னாள் மாணவர் முனைவர் சேக் அப்துல் காதர் வரவேற்றார். முன்னாள் மாணவர் ரவீச்சந்திரன் முடிவில் நன்றி கூறினார். இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். கல்லூரி படிப்பு நிறைவின் போது முன்னாள் மாணவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவை அனைவருக்கும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

0 comment(s) to... “காதிர்முகைதீன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி”