அதிரையில் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்,வேன்கள் அகற்றம்

Posted September 19, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் கார் மற்றும் வேன்கள் நிறுத்துவதற்காக தனி இடம் இல்லை என்பதால் கார் மற்றும் வேன்கள் நீண்ட வருடங்களாக பேரூந்து நிலைய வளாகத்தை சுற்றியே நிறுத்தப்பட்டுவந்தது இது தொடர்பாக பேரூராட்சி சார்பாக டாக்ஸி ஸ்டாண்டை அப்புறப்படுத்தவேண்டு மென நீதி மன்றத்தில் வழக்குத்தோடுக்கப்பட்டு வழக்கின் தீர்ப்பு வந்ததை அடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மூலம் பேரூந்து நிலைத்திலிருந்து டாக்ஸி ஸ்டாண்டை அப்புறப்படுத்தப்பட்டு காதர் முகைதீன் கல்லூரி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் முத்தாம்மாள் தெருவைச் சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனையடுத்து பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் கார் மற்றும் வேண்கள் மீண்டும் பேரூந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு வந்தது இதையடுத்து பட்டுக்கோட்டை ஆர்டிஓ கோவிந்தராஜ் ஏஎஸ்பி அரவிந்தமேனன் தாசில்தார் ரவிசந்திரன் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆர்ஐ ராஜகுமாரி மற்றும் விஏஓக்கள் இளங்கோ விஸ்வலிங்கம் அருண்மொழி கிரிதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் இன்று டாக்ஸி ஸ்டாண்டை அப்புறப்படுத்தி பின்னர் எச்சரிக்கை பலகையை வைத்தனர் இதையடுத்து கார் மற்றும் வேன் உரிமையாளர்கள் எங்களுக்கென கார்கள் மற்றும் வேன்கள் நிறுத்த இடம் இல்லை எனவே எங்களுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டுமென அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்தனர் இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்










0 comment(s) to... “அதிரையில் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்,வேன்கள் அகற்றம்”