அதிரை அருகே மனோராவில் துர்நற்றம் வீசும் கழிவறை-சுற்றுலா பயணிகள் அவதி

Posted September 26, 2016 by Adiraivanavil in Labels:
அதிரை அருகே மனோராவில் துர்நற்றம் வீசும் கழிவறை-சுற்றுலா பயணிகள் அவதி
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கி .பி 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.ஆங்கில அரசுக்கு ஜால்ரா மன்னராக இருந்த இவர் ஆங்கிலேயர்களுக்கும் நெப்போலியனுக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இந்த மனோராவை உருவாக்கினார் . 75 அடி உயரம் கொண்ட மனோரா அருங்கோண வடிவில் எட்டு அடுக்குகளை கொண்டது. மராட்டியர்களின் கட்டிடகலைக்கு உதாரணமாய் விளங்கும் இந்த கோட்டையை சுற்றி மதில் சுவரும் அதன் உள்ளே அகழியும் இருக்கிறது. கடற்கரை ஓரத்தில் இருக்கும் இந்த உப்பரிகை போல் அமைந்த கோட்டைக்கு சரபோஜி மன்னர் ராணியுடன் சில சமயங்கள் வந்து போனதாக தகவல்கள் உண்டு. துப்பாக்கிகள்,மற்றும் ஏனைய ஆயுதங்கள் வைத்துகொள்ளும் இடமும் இங்கே உண்டு. இந்தநிலையில் பள்ளி விடுமுறையின் போது உள்ளுர் மற்றும் வெளியூர் உள்ள மாணவ மாணவிகள், பெறியவர்கள் சிறுவர்கள் என பொழுதை குதுகலத்துடன் கழிப்பதற்காக இங்கு தினமும் வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 500 முதல்1000  பேர் வரை வருவதாக கூறுகின்றனர். அதுவும் வார கடைசி நாட்களில்  சனி, ஞாயிறுகளில்  இந்த எண்ணிக்கை கூடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். நாம் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மனோராவும்; பூங்காவை  சுற்றுலா பயணிகள் அங்கு வருகின்றனர் இதனையடுத்து சிறுவர் சிறுமிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு,; ஆகியவற்றில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். ;மனோராவில்; உள்ள கடலில் சுற்றிப் பார்ப்பதற்கென்றே படகு சவாரி செயல்படாமல் முடங்கி காணப்படுவதுதால் சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய செய்தது.
இப்படி இருக்கும்  சுற்றுலா தளத்திற்க்கு  வருகைதரும் பயணிகளுக்கு;; மனோரா ஏதிரில் இலவச பொது கழிவறை அமைக்கப்பட்டுள்ளது இதில் ஆண்கள் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டிற்கும் கழிவறையில் தண்ணீர் வசதியில்லாமல்  மிகவும் சுகாதாரமற்று காணப்பட்டன. கழிவறையின் உள்ளே சென்றுவிட்டு திரும்பிய பயணிகளில் பெரும்பாலானோர் வாந்தியுடன் வெளியே வருவதை காணமுடிந்தது. நிர்வாகத்தினர் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும் .

இது பற்றி பட்டுக்கோட்டை சரவணன் கூறுகையில் 
சுற்றுலா தளமான மனோராவிற்க்கு என் குடும்பத்துடன் வந்துவுள்ளேன் மனோராவில் உள்ளே சென்று பார்ப்பதற்க்கு உள்ளே கதவு பூட்டியே கிடக்குது என்னை போல் வெளியூரில் வந்துவுள்ள சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இது மட்டுமில்லாமல் மனோரா எதிரே இருக்கும் கழிவறையும் மிகவும் தண்ணீர் வசதியில்லாமல் துர்நாற்றம் வீசிவருகிறது இதை உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுனார் 


0 comment(s) to... “அதிரை அருகே மனோராவில் துர்நற்றம் வீசும் கழிவறை-சுற்றுலா பயணிகள் அவதி”