பேராவூரணியில் திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

Posted September 22, 2016 by Adiraivanavil in Labels:
பேராவூரணி, செப்.22:
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டித்து பேராவூரணியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் நலனை காக்க தமிழக அரசை வலியுறுத்துவது. கர்நாடகத்தில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்து வது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்பு செயலாளர் நீலகண்டன், வெங்க டேசன் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.



0 comment(s) to... “பேராவூரணியில் திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்”