அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கி கணவன் மணைவி உயிரிழந்தார்

Posted June 21, 2015 by Adiraivanavil in Labels:
 ஆலங்குடி அருகே பூப்பறிக்க தோட்டத்திற்கு சென்றவர் அறுந்துகிடந்த மின்கம்பியை
மிதித்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அப்போது கணவரை காப்பாற்ற சென்ற மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு பட்டிபுஞ்சையை சேர்ந்தவர் கருப்பையா மகன் சின்னப்பா(55) இவர் இன்று அதிகாலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தனது தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காத சின்னப்பா மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அலறியபடி கீழே விழுந்துள்ளார். அவரது அலரல்சத்தம் கேட்ட அவரது மனைவி அன்னபூரணி(50) தோட்டத்திற்கு ஓடினார். அங்கு கீழேவிழுந்து கிடந்த கணவரை தூக்க அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்திவிட்டு இருவரது உடலையும் மீட்டனர். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 செய்திகள் ஆலங்குடி சந்திரசேகர்






0 comment(s) to... “அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் தாக்கி கணவன் மணைவி உயிரிழந்தார்”