பட்டுக்கோட்டையில் டீக்கடைக்காரர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Posted June 24, 2015 by Adiraivanavil in Labels:

பட்டுக்கோட்டையில் டீக்கடைக்காரர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நகை திருட்டு பட்டுக்கோட்டை தாலுகா பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது35). இவர் தனது வீட்டின் முன்புறம் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையை பூட்டிவிட்டு கருணாநிதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பீரோவை திறந்து உள்ளே இருந்த 5 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து கருணாநிதி மதுக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் டீக்கடைக்காரர் வீட்டின் ஜன்னலை உடைத்து 5 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு”