2022-க்குள் அனைவருக்கு வீடு 3 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Posted June 23, 2015 by Adiraivanavil in Labels:
PM-Modi speech(C)
புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டங்களாக பல்வேறு சமுதாய வளர்ச்சித் திட்டங்கலை அறிமுகம் செய்து வருகிறார். அவரது திட்டங்களில் ஸ்மார்ட் சிட்டிஸ், 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டம் மற்றும்
2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு ஆகிய மூன்றும் முக்கிய திட்டங்களாகும்.
இதில் 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதுபோல் அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு கடந்த 17ம் தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த 3 திட்டங்களின் தொடக்க விழா, வருகிற 35ம் தேதி டெல்லி விஞ்ஞான பவனில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு 3 புதிய திட்டங்கலை தொடங்கி வைக்கிறார்.
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 2 கோடி ஏழைகள் பயன் அடைவார்கள். இதற்காக மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி செலவிடும். இந்த நிதி 7 ஆண்டுகள் செலவிடப்பட்டு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதுபோல ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.48 ஆயிரம் கோடி செலவிடப்படும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தலா ரூ.100 கோடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது.


0 comment(s) to... “2022-க்குள் அனைவருக்கு வீடு 3 புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி”