அதிரையில் உலக யோகா தினம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
Posted June 22, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
உலக யோகா தினத்தையொட்டி,அதிராம்பட்டினம் கரையூர் பள்ளியில் பிஜேபி சார்பில் யோகா நடைபெற்றது
அதிராம்பட்டினம் கரையூர் பள்ளியில் யோகா விளக்கப் பயிற்சிகள் நடைபெற்றன. இவற்றில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியா அரசின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் யோகாப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உலக யோகா தினம் சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.
யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சூர்ய நமஸ்காரம், உக்கட்டாசனம், புஜங்காசனம், தனுராசனம், உதனபதாசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், நிந்தர பசாசனம், மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் ஆகிய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் , பள்ளிகள், சேர்ந்த மாணவ, மாணவிகள்,, அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தி படங்கள் காளிதாஸ்
0 comment(s) to... “அதிரையில் உலக யோகா தினம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு”