அதிரையில்திடீர் சாலை மறியலால் பரபரப்பு-படங்கள் இணைப்பு

Posted June 24, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில்  உள்ள கார், வேன் நிறுத்தத்தை  முத்தம்மாள் தெரு எதிரே உள்ள கால்வாய் மேல் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது இதனால் 
முத்தமாள்தெரு 
வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த முயற்சியை கைவிட கோரி பலமுறை புகார்மனுக்களாக   பேரூர் நிர்வாகத்தின் கவனத்திற்கு  கொண்டு சென்றதாக கூறப்படுகிறது .இந்நிலையில் கார் வேன் நிருத்ததிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஆத்திரமடைந்த முத்தமாள்தெரு வாசிகள்  இன்று  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து  தகவலறிந்து வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து காவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக அறிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது . திடீர் சாலை மறியலால் பரபரப்புஏற்பட்டது .










0 comment(s) to... “அதிரையில்திடீர் சாலை மறியலால் பரபரப்பு-படங்கள் இணைப்பு”