மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தகவல்

Posted June 26, 2015 by Adiraivanavil in Labels:
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று வேலை
வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறி உள்ளார்.பரிந்துரை பட்டியல் தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் நிலை-2 காலி பணியிடத்துக்கான மாநில அளவிலான உத்தேச பரிந்துரை பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடத்திற்கான கல்வித்தகுதி மேல்நிலைக்கல்வி தேர்ச்சி மற்றும் ஆய்வக தொழில்நுட்ப 2 ஆண்டு பட்டயப்படிப்பு ஆகும். வயது வரம்பு இதர பிரிவினருக்கு 1-7-2015 நிலையில் 30 வயது. மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

உத்தேச பரிந்துரை பட்டியலின் பதிவு மூப்பு தேதி விவரம்:-

எஸ்.டி. பிரிவினருக்கு 4-4-2013. எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 31-5-2010. எஸ்.சி. பிரிவினருக்கு 2-9-2008. எம்.பி.சி. பிரிவினருக்கு 27-5-2010. பி.சி. பிரிவினருக்கு 28-5-2010. ஓ.சி. பிரிவினருக்கு 30-6-2010. பி.சி.எம். பிரிவினருக்கு 12-12-2011.

சரிபார்க்க அழைப்பு

ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர், முன்னாள், இன்னாள் படைவீரர் சார்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து வகை முன்னுரிமை பிரிவினரும் 22-6-2015 வரை பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

அறிவிக்கப்பட்ட கல்வித்தகுதியும், பதிவுமூப்பும் உடைய, மாநில பதிவு மூப்பின்படி பரிந்துரைபட்டியலில் இடம்பெற்றுள்ள தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் பரிந்துரைபட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதை வருகிற 29-ந்தேதிக்குள் சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். 


0 comment(s) to... “மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு பரிந்துரை பட்டியல் வெளியீடு வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தகவல்”