அதிரை கரையூர் மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் பக்கதர்களுக்கு பாத பூஜை
Posted November 27, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்,நவ.27
அதிராம்பட்டினம் கரையூர் தெரு சந்தன மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் கோவில் செல்லும் குருசாமி மற்றும் ஐயப்பன் பக்கதர்களுக்கு பாதை பூஜை நிகழ்ச்சி நடந்தது. அதிராம்பட்டினம் கரையூர் சந்தன மாரியம்மன் கோவிலில், தெருவில் வசிக்கும் V.ராமசாமி என்பவர் 18-வது வருட ஐயப்பன் பக்தர் பூர்த்தி அடையும் நிலையில் அவர் சார்பில், நடத்திய பாதை பூஜையில் ஐயப்ப குருசாமிகள் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனையடுத்து ஐயப்ப பக்தர்களை வரிசையாக நிற்க வைத்து, திருநீர், சந்தனம், குங்குமம் மற்றும் பூக்களால், பாதை பூஜை செய்யப்பட்டது. இதில் அதிராம்பட்டினத்தில் சுற்றிவுள்ள ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர், இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
0 comment(s) to... “அதிரை கரையூர் மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் பக்கதர்களுக்கு பாத பூஜை”