அதிரையில்; இலவச பொது மருத்துவ முகாமில் 385 பேர் பயனடைந்தனர்.
Posted November 21, 2016 by Adiraivanavil in Labels: லயன்ஸ் சங்கம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம், கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், மற்றும் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து பொதுமருத்துவ முகாம் சாரா திருமண மண்டபத்தில்; நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் லயன்ஸ் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக்; தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் சங்க பொருலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மண்டலச் செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், தொடங்கிவைத்தார். இதில் வாட்டார தலைவர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், நிர்வாகிகள் கலந்துகொண்டார் இதனையடுத்து தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களை உடல் எடை, இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவைக் குறித்து முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 385 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
0 comment(s) to... “அதிரையில்; இலவச பொது மருத்துவ முகாமில் 385 பேர் பயனடைந்தனர். ”