அதிரை பேரூராட்சி; அலுவலரிடம் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் கோரிக்கை
Posted November 10, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், நவ-10
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12, 13, 14, 19, 20, 21 ஆகிய வார்டு பகுதிகளில் சாலையில் சிதறும் குப்பைகள் அள்ளப்படத்தால் துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த வழியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன் நீர் வறட்சி காலத்தில் குளங்களுக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி பொது நிதிலிரந்து 43.50 லட்சம் மதிப்பீட்டில் அதிராம்பட்டினம் நசுவினி காற்று ஆறு நீரை பம்பிங் மூலம் சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து சுற்றிவுள்ள 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணி 20 எச்.பி. மோட்டார் மூலம் நடை பெற்று வந்தது. இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆலடிக்குளம் செக்கடி குளம் காட்டுக்குளம் மரைக்காகுளம் செடியன்குளம் மற்றும் பிள்ளைமார்குளம் ஆகிய குளங்கள் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதன் தொடர்பாக ; சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர்கள். தலைவர் அஹமதுஅனஸ் துணைதலைவர் மரைக்கா இத்ரீஸ்அஹமது செயலாளர் முஹமதுசலிம் துணைசெயலாளர் முஹம்மதுதம்பி பொருலாளர் சேக்அலி மற்றும் உறுப்பினர்கள் திரண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
0 comment(s) to... “அதிரை பேரூராட்சி; அலுவலரிடம் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் கோரிக்கை ”