அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வாட்டர்பாக்கெட், பிஸ்கட், வழங்கினார்கள்.
Posted November 13, 2016 by Adiraivanavil in Labels: ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அதிராம்பட்டினம்;, நவ.13-
அதிராம்பட்டினத்தில் 500, 1000த்தை மாற்ற வங்கி முன் நீண்டவரிசை நின்ற பொதுமக்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பில் வாட்டர்பாக்கெட்பிஸ்கட், வழங்கினார்கள். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற 4வது நாளாக அதிகாலை முதலே பொது மக்கள் வங்கிகள் முன்பு வரிசை கட்டி நின்றனர். இதனையடுத்து அதிராம்பட்டினம் பகுதியில் கருப்பு பணத்தை ஒழிக்க அரசு எடுத்த இந்த முடிவை பெரும் பாலானோர் வரவேற்றாலும். 500, 1000 நோட்டுகள் செல்லாததால் சில்லறை நோட்டுகள் 100, 50 கிடைக்காமல், அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதில் வங்கிகள் மூலம் பொது மக்கள் தங்களிடமுள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், ஏடிஎம்கள் மூலம் ஒருவர் 2ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் அதிராம்பட்டினத்தில்; நேற்று வரை பல ஏடிஎம்கள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப் பட்டதால் பொது மக்கள் தங்களிடமுள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்துக் கொண்டு வங்கிகள் முன்பு காலையில் 6 மணிமுதல் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே வரிசை கட்டி நிற்கத் தொடங்கினர். இதில் நேற்று முன்தினம் வங்கி முன் நீண்டவரிசை நின்ற இருவர்கள் மயங்கி கிழே விழுந்தனர். இதனையடுத்து நேற்று அதிராம்பட்டினம் பொதுமக்கள் பண பரிமாற்றம் செய்ய வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கும் பயணாளிகளின் சிரமங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க சார்பில் வாட்டர்பாக்கெட், பிஸ்கட், வழங்கினார்கள் இதில் அதிராம்பட்டினம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த ஏற்பாட்டினை சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர்கள். தலைவர் அஹமதுஅனஸ் துணைதலைவர் மரைக்கா இத்ரீஸ்அஹமது செயலாளர் முஹமதுசலிம் துணைசெயலாளர் முஹம்மதுதம்பி பொருலாளர் சேக்அலி மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.

0 comment(s) to... “அதிரையில் ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு வாட்டர்பாக்கெட், பிஸ்கட், வழங்கினார்கள்.”